பாஜக ஆட்சியில் ஏற்பட்ட கஷ்டங்களைநினைத்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்: தஞ்சை தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்

பாஜக  ஆட்சியில் ஏற்பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்த்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கூத்தாநல்லூர்

பாஜக  ஆட்சியில் ஏற்பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்த்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கூத்தாநல்லூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கூத்தாநல்லூர் பகுதியில், திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார். குடிதாங்கிச்சேரியில் தொடங்கி சேகரை, பொதக்குடி, ஆய்குடி மற்றும் வாழாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: மதவெறி பிடித்த பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். 
இந்த ஆட்சியால் பட்ட கஷ்டங்களை தமிழக மக்கள் நினைத்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும். தேர்தலின்போது நரேந்திர மோடி மக்களிடம் சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவர். தமிழகத்தை அழிக்கும் பாஜக அரசின் திட்டங்களுக்கு துணையாக இருந்து வரும் தமிழக அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு, தஞ்சை மக்களவைத் தொதியில் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என எஸ்.எஸ். பழநிமாணிக்கம் வாக்காளர்களைக்
கேட்டுக்கொண்டார். 
இந்த பிரசாரத்தில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ராசமாணிக்கம், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் விசு. அண்ணாதுரை, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் குத்புதீன், திமுக நிர்வாகிகள் கார்த்திக், வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலம், ஏப். 2: தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநி மாணிக்கம் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வாக்குச் சேகரித்தார். திறந்த ஜீப்பில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. வேட்பாளருடன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com