அம்மன் தேரை தோளில் சுமந்து எல்லையை சுற்றி வந்து வழிபாடு

அம்மன் தேரை தோளில் சுமந்தபடி 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கிராம எல்லையை வயல்வெளி வழியாக சுற்றி வந்து பொதுமக்கள் புதன்கிழமை வழிபாடு நடத்தினர். 

அம்மன் தேரை தோளில் சுமந்தபடி 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கிராம எல்லையை வயல்வெளி வழியாக சுற்றி வந்து பொதுமக்கள் புதன்கிழமை வழிபாடு நடத்தினர். 
திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே 2 கீரனூர் கிராமத்தில் உள்ள அய்யனார், செல்லியம்மன், மாரியம்மன் கோயிலில் மார்ச் 25-ஆம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவைத் தொடர்ந்து, நாள்தோறும் இரவு அய்யனார் மற்றும் மாரியம்மன் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செல்லியம்மன் எல்லை தேர்பவனி புதன்கிழமை நடைபெற்றது. சக்கரம் இல்லாமல் அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன் எழுந்தருளினார். பின்னர், நூற்றுக்கணக்கானோர் தேரை தோளில் சுமந்து சென்றனர். செல்லியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்ட இந்த எல்லை தேர்பவனி சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கிராம எல்லையை வயல்வெளி வழியாக சுற்றி வந்து மீண்டும் கோயிலுக்கு வந்தது. இதில், தேவூர், மங்கைநல்லூர், கொல்லுமாங்குடி, குமாரமங்கலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) தீமிதி திருவிழா நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com