சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 18th April 2019 01:46 AM | Last Updated : 18th April 2019 01:46 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
வேளுக்குடியில் உள்ள ருத்ரக்கோடீஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கும், அதிகார நந்திகேஸ்வரருக்கும் 108 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டன. இதேபால், லெட்சுமாங்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர், மங்களாம்பிகைக்கும், பண்டுதக்குடியில் எழுந்தருளியுள்ள வாஸலாம்பிகா சமேத உமாபதீஸ்வரர் கோயில், கம்பர் தெரு நீலகண்டேஸ்வரர் கோயில், காக்கையாடியில் கைலாசநாதர் கோயில், சாத்தனூரில் காளகஸ்தீஸ்வரர், திருராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில், அதங்குடியில் விருப்பாட்சிஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் மூலவருக்கும், நந்திகேஸ்வரருக்கும் பிரதோஷத்தையடுத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.