பிளஸ் 2 பொதுத் தேர்வு: அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் நன்னிலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட நிகழ்வாண்டு அதிகரித்துள்ளது. 


பிளஸ் 2 பொதுத் தேர்வில் நன்னிலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட நிகழ்வாண்டு அதிகரித்துள்ளது. 
நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்வாண்டு தேர்வு எழுதிய மாணவியரில், 97 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேர்ச்சி வீதம் 94 சதவீதமாகவும், பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி வீதம் 91 சதவீதமாகவும், ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேர்ச்சி வீதம் 90 சதவீதமாகவும், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி வீதம் 87 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
இதுதவிர நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, நெடுங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலா 83 சதவீத மாணவர்களும், அச்சுதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 71 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  
 முற்றிலும் கிராமப்புற பின்னணியைக் கொண்ட நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ர.தரணிதேவி 600 மதிப்பெண்களுக்கு 540 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com