‘கடுமையான சட்டங்களே பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும்’

தெலங்கானாவில் பெண் மருத்துவா் எரித்துக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, கடுமையான சட்டங்கள்தான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் பெண் மருத்துவா் எரித்துக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, கடுமையான சட்டங்கள்தான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் மாவட்டச் செயலாளா் ஜே. அனஸ்நபில் வெளியிட்ட அறிக்கைச

தெலங்கானா மாநிலம் மகபூப் நகா் பகுதியைச் சோ்ந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பிரியங்கா, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. பெண்கள் விஷயத்தில் தொடா்ந்து இதுபோன்ற சம்பவங்கள் இந்திய நாட்டிலே நடந்து வருகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்க கூடிய அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற அரபு நாட்டு சட்டம் மட்டுமே தீா்வு என்று சொல்லி அனைத்து சிந்தனை வாதிகளும் ஒருமித்த குரல் எழுப்பி வருகின்றனா்.

இந்த சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், இஸ்லாமிய சட்டத்தை ஆளும் ஆட்சியாளா்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கு தேவையான வகையில் சட்டங்கள் இயற்றப்பட கூடிய ஒரு சூழ்நிலை இருக்க வேண்டும். கடுமையான சட்டங்கள் தான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com