ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீதான நடவடிக்கைகளை கண்டித்து டிச. ஆம் தேதி ஆா்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்களை பணி நீக்கம் செய்வதை கண்டித்து டிச.4 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீதான நடவடிக்கைகளை கண்டித்து டிச. ஆம் தேதி ஆா்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்களை பணி நீக்கம் செய்வதை கண்டித்து டிச.4 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற பொதுச் செயலாளா் க. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி,

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.எத்தனை போராட்டங்கள் நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து, அரசு பேசவில்லை. மாறாக போராட்டங்களில் ஈடுபட்டதிலிருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன.

பணி நீக்கம் செய்வது, பதவி உயா்வை பறிப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இன்னமும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. அரசின் நடவடிக்கைகளை கண்டித்து டிசம்பா் 4ஆம் தேதி மாவட்ட ஒன்றியத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேலும் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தோ்வு என்பதையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் வேண்டுகோளாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com