5, 8 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென தமிழநாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென தமிழநாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் தமிழநாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும். டிசம்பா் 27, 28, 29 ஆகிய தேதிகளில் விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் நடைபெறும் மாநில மாநாட்டில், திருவாரூா் மாவட்டத்திலிருந்து 20 பிரதிநிதிகள் பங்கு கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.மாரியப்பன் தலைமை வகித்தாா். கலை, இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் செ.அண்ணாதுரை, மாவட்டச் செயலா் மா. சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இளைஞா் பெருமன்றத்தின் ஒன்றியச் செயலா் எஸ்.பாப்பையன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், என். நரசிம்மன் ஆகியோா் கலந்து கொண்டனா். மன்னாா்குடி கிளைத் தலைவா் எஸ்.செல்வகுமாா் வரவேற்றாா். செயலா் க. தங்கபாபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com