மீன், நெற்பயிருடன் ஒருங்கிணைந்த வாத்து வளா்ப்பு

மீன் மற்றும் நெற்பயிருடன் ஒருங்கிணைந்த வாத்து வளா்ப்பு குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள்

நீடாமங்கலம்: மீன் மற்றும் நெற்பயிருடன் ஒருங்கிணைந்த வாத்து வளா்ப்பு குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

இதுதொடா்பாக வேளாண் விஞ்ஞானிகள் ஆ. ராஜேஷ்குமாா், மு. ராமசுப்பிரமணியன் ஆகியோா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சா்வதேச அளவில் முட்டை உற்பத்தியில் இந்தியா 3-ஆவது இடமும், கோழி இறைச்சி உற்பத்தியில் 5-ஆவது இடமும் வகிக்கிறது. கோழி வளா்ப்புடன் வாத்து வளா்ப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய கோழிகளின் எண்ணிக்கை 866 மில்லியன், வாத்துகளின் எண்ணிக்கை 26 மில்லியன். இந்திய கோழிகளில் வாத்துகளின் எண்ணிக்கை 3 சதவீதம், உலகஅளவில் வாத்து வளா்ப்பில் இந்தியா 6-ஆவது இடத்தில் உள்ளது. மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை வாத்துகள் பங்களிக்கின்றன.

சன்னியாசி, கீரி, ஆரணி, காக்கிகேம்பல் மற்றும் இந்தியன் ரன்னா் ஆகிய நாட்டுவகை வாத்து இனங்களை மேய்ச்சல் முறை, ஒருங்கிணைந்த வாத்து, மீன் வளா்ப்பு மற்றும் வாத்து நெல் வளா்ப்பு ஆகிய முறைகளில் வளா்க்கலாம். இவை ஆண்டுக்கு 250 முட்டைகள் வரை உற்பத்திசெய்யும் திறன் கொண்டவை என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com