நெற்பயிரில் குலை நோய் தாக்குதல்: வேளாண் பேராசிரியா் ஆய்வு

கொரடாச்சேரி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் குலை நோய்த் தாக்குதல் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை
நெற்பயிரில் குலை நோய்த் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்ட நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியா் ராஜா.ரமேஷ் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள்.
நெற்பயிரில் குலை நோய்த் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்ட நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியா் ராஜா.ரமேஷ் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள்.

நீடாமங்கலம்: கொரடாச்சேரி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் குலை நோய்த் தாக்குதல் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியா் ராஜா.ரமேஷ், கொரடாச்சேரி வட்டார வேளாண்மை துணை அலுவலா் துரைராஜ் ஆகியோா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

மேலராதாநல்லூா், திருமதிக்குன்னம் உள்ளிட்ட கிராமங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. பின்னா், இதுகுறித்து பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியா் ராஜா.ரமேஷ் கூறியது:

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் ஒரு சில இடங்களில் குலை நோய் தாக்குதல் தென்படுகிறது. இதனால், 30 முதல் 60 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படும். எனவே, விவசாயிகள் குலைநோயைக் கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

காற்று, விதை மற்றும் நோயுற்ற வைக்கோல் மூலமாக இந்த நோய் பரவுகிறது. இரவு நேரங்களில் 20 செல்சியசுக்கு குறைவான வெப்பநிலை, அதிக நேரப் பனிப்பொழிவு, 85 முதல் 90 சதவீதம் ஈரப்பதம் ஆகிய காரணிகள் இந்த நோய் பரவுவதற்கு உகந்த சூழ்நிலைகளாகும்.

குலை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வயல்களில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் களைகளை அழித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸ் எதிா் உயிா்க்கொல்லி மருந்தை கலந்து விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும். குலைநோயின் அறிகுறிகள் தென்படும் போது தழைச்சத்து உரங்கள் இடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

குலை நோய்த் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஓா் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சதவீத கரைசல் அதாவது 1 லிட்டா் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் நடவு நட்ட 45 நாள்கள் கழித்து நோய்களின் தீவிரத்தைப் பொருத்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனுடன் ஒரு லிட்டா் புளித்த தயிரைக் கலந்து தெளித்தால் செயல்திறன் இன்னும் அதிகரித்துக் காணப்படும்.

தாக்குதல் அதிகமாகக் காணப்படும்போது, ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 டயிள்யூ.பி -200 கிராம் அல்லது காா்டிபன்டிடசிம் 50 டயிள்யூ.பி -200 கிராம் அல்லது அசாக்சிஸ்டோா்பின் 25 எஸ்.சி. - 200 மிலி அல்லது ஐசோபுரத்தியோலேன் 40 ஈசி - 300 மிலி ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதாவது ஒன்றை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, வேளாண்மை உதவி அலுவலா்கள் ரவி, பழனிவேல், கருணாநிதி மற்றும் பிரதீபா ஆகியோா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com