"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  திரும்பப் பெற வேண்டும்'

திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஜன.27-ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 16-ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். காவிரி சமவெளி பகுதி சங்க காலத்திலிருந்தே  தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. இந்த நெற்களஞ்சியத்தை ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாழ்படுத்த நினைக்கிறார்கள். காலம் காலமாக வேளாண்மை செய்து, தங்களை வாழ்வித்துக் கொண்டதோடு, பிற மக்களையும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றனர். நவீன உலகில் பெட்ரோலிய பொருள்களின் தேவை குறைந்து கொண்டு வருகிறது. 2030-இல் பெட்ரோல் கார்களே கிடையாது என இதே மத்திய அரசு அறிவிக்கிறது. மின்சார கார்கள்தான் வரப்போகிறது என்றால் தற்போதுள்ள விளைநிலங்களை எதற்காக பாழ்படுத்த வேண்டும். இந்த மக்களின் நலன் கருதி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார் பழ. நெடுமாறன். பேட்டியின்போது, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com