அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி மாறுதல்: ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களைப் பணிமாறுதல் செய்வதைக் கண்டித்து திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ

அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களைப் பணிமாறுதல் செய்வதைக் கண்டித்து திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கன்வாடி மையங்களில் தொடங்கவுள்ள எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை  ஆசிரியர்களைப் பணிமாற்றம் செய்வதைக் கைவிட வேண்டும். 3,500 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை  உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். குறைந்த மாணவர்களைக் கொண்ட  பள்ளிகளில் இயங்கும் சத்துணவு மையங்களை மூடி பிற இடங்களில் இருந்து சமைத்துக் கொண்டு வரும் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆர். ஈவேரா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்  வி. சோமசுந்தரம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் எஸ். துரைராஜ், தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் பெ.ரா. ரவி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க  மாவட்டச் செயலாளர் ஆர். சத்தியமூர்த்தி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாவட்டச் செயலாளர் சிவகுரு ஆகியோர் தலைமை வகித்தனர்.
 ஜாக்டோ-ஜியோவில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசு ஊழியர்கள் சங்கங்கள், தொடக்க மற்றும்  உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள் சங்கங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com