சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள சாய்பாபா கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள சாய்பாபா கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
லெட்சுமாங்குடி மரக்கடை ஷீரடி சாய்பாபா தியான  பீடத்தில், சாய்பாபாவுக்கு மஞ்சள்பொடி, சந்தனம், பன்னீர், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம்  செய்யப்பட்டது. பின்னர், பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனை
நடைபெற்றது. 
தொடர்ந்து, ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம்  செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். 
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி வெள்ளையன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல், சித்தாம்பூர் ஷீரடி சாய்பாபா கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com