திருவாரூர், கொரடாச்சேரியில் ஜனவரி 19 மின்தடை

திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜன. 19) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜன. 19) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் எஸ். ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  திருவாரூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளன. இதையொட்டி, திருவாரூர் துணைமின் நிலையம், கப்பல்நகர் துணைமின் நிலையம் ஆகியவற்றிலிருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் நகர், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், திருப்பயத்தாங்குடி, மாவூர் ஆகிய பகுதிகளிலும், இதேபோல் அடியக்கமங்கலம் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அடியக்கமங்கலம், இபி காலனி,  சிதம்பர நகர், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பளாம்புலியூர், புதுபத்தூர், நீலப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கொரடாச்சேரி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கொரடாச்சேரி, முகுந்தனூர், கண்கொடுத்த வணிதம், கமுகக்குடி, செல்லூர் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என புறநகர் உதவி செயற்பொறியாளர் என். பிரபா தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி பகுதியில்...
மன்னார்குடி, ஜன.18: மன்னார்குடி, கூத்தாநல்லூர் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.19) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மன்னார்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சா. சம்பத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார்குடி துணை மின் நிலையத்தில்  மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மன்னார்குடி, கூத்தாநல்லூர், அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், காணூர், நாவல்பூண்டி, கோரையாறு, கர்ணாவூர் ஆகிய பகுதிகளிலும் இப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com