விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபட்டவர் பக்கிரிசாமி

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டவர்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. பக்கிரிசாமி என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி புகழாரம் சூட்டினார்.
திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், விவசாயிகள் சங்கத் தலைவராகவும் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மறைந்த பி. பக்கிரிசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவையொட்டி வியாழக்கிழமை அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து கட்சிக் கொடியை ஏற்றிவைத்து பாண்டி கடைவீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: தனது இளமைப் பருவத்தில் இருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு விவசாயிகள் ,விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபட்டவர் என்றால் அதுமிகையாகாது. இப்பகுதியில் வெள்ளம் வறட்சி போன்ற காலங்களில் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி பயிர்க் காப்பீட்டுத்தொகை மற்றும் நிவாரணங்களைப் பெற்றுத்தருவதில் அவருக்கு நிகர் யாருமில்லை. மேலும், காவிரி கடைமடை பகுதியில் வெள்ளம் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் பல வெள்ளத் தடுப்புத் திட்டத்தை அரசின் மூலமாக செயல்படுத்தினார். 
திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவி வகித்தபோது மாவட்டம் முழுவதும் சிறப்புநிதி ஒதுக்கீடு பெற்று கிராம சாலைகளின் தரம் உயர முயற்சி மேற்கொண்டார். அவரது இழப்பு இந்த மாவட்ட விவசாயிகள்,விவசாயத் தொழிலாளர்களுக்கு பேரிழப்பாகும். 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அறுவடையில் மகசூல் வெகு குறைவாக உள்ளதால், அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும், அனைத்து கூட்டுறவு கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றார் பழனிச்சாமி. 
இதில், மக்களவை முன்னாள் உறுப்பினர் எம்.செல்வராஜ், மாவட்டச் செயலர் வை. சிவபுண்ணியம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன், மாவட்ட முன்னாள் ஊராட்சித் தலைவர் வை. செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com