ஓவியப் போட்டியில் 400 மாணவர்கள் பங்கேற்பு

திருவாரூரில் நடைபெற்ற மருத்துவக் கண்காட்சியில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் நடைபெற்ற மருத்துவக் கண்காட்சியில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ஓவியப் போட்டியில் பெயர் பதிவு செய்வதற்காக, காலை 9 மணியிலிருந்தே மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கண்காட்சி வாசலில் காத்திருந்தனர். 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஓவியப் போட்டியில் பங்கேற்றனர். ஓவியப்போட்டியானது, 3 முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு என்னும் தலைப்பிலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என்னும் தலைப்பிலும், 9 முதல் 12- ஆம் வகுப்பு வரை ஆரோக்கிய வாழ்வு என்னும் தலைப்பிலும் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டன. போட்டிகள் தொடங்கிய பிறகும் ஏராளமானோர் வந்து கொண்டிருந்ததால், அவர்களும் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
3 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில்...
மன்னார்குடி, ஸ்ரீ பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவர் கே. கதிரவன் முதல் இடமும், திருவாரூர் சாய்ராம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவி எஸ். துவாரகா இரண்டாமிடமும், திருவாரூர் சாய்ராம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவி பி. அட்சயா பிரியா மூன்றாமிடமும் பெற்றனர்.
6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில்... 
திருவாரூர் ஆர்.சி. பாத்திமா மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவர் பி. விஷ்ணுகிரண் முதலிடமும், திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி ஆர். தேவதர்ஷினி இரண்டாமிடமும், திருவாரூர் தி மெரிட் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி ஏ. அன்னபூரணி மூன்றாமிடமும் பெற்றனர்.
9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில்...
மன்னார்குடி ஸ்ரீ பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர் வெ. சதீஷ், மன்னார்குடி ஸ்ரீ பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவர் ஜே. ரோஹித் இரண்டாமிடமும், திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி எஸ். மோகனா மூன்றாமிடமும் பெற்றனர். 
போட்டியில் பரிசு பெற்ற அனைவருக்கும் தினமணி மற்றும் தஞ்சை பி.ஐ.எம்.எஸ். அபாகஸ் நிறுவனம் சார்பில் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com