ஆசிரியர் பணி நிரவலில் முரண்பாடுகளை களைய வலியுறுத்தி 22- இல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

ஆசிரியர் பணி நிரவலில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் இடையிலான முரண்பாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட முதன்மைக்


ஆசிரியர் பணி நிரவலில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் இடையிலான முரண்பாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஜூலை 22- இல் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் சத்யநாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ஈவெரா பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட முன்னாள் செயலர் மதிவாணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜூலியஸ், அகில இந்திய பொது குழு உறுப்பினர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்:  வட்டாரக் கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார கல்வி அலுவலகங்களுக்கு கணினி ஆப்பரேட்டர் பணி நியமனம் செய்ய வேண்டும். புதிய கல்வி கொள்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஆசிரியரிடத்தில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்வது. அங்கன்வாடி பணி நியமனங்களில் திருவாரூர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட மன்னார்குடி, திருவாரூர் மாவட்டக் கல்வி  அதிகாரிகள் இடையே உள்ள முரண்பாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். 
திருவாரூர், மன்னார்குடி  மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தேர்வு நிலை, சிறப்பு நிலை பெறுவோருக்கான  விண்ணப்பங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22- ஆம் தேதி  திருவாரூர் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com