கோடை உழவு: வேளாண் துறை வேண்டுகோள்

திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்து பயனடைய வேண்டுமென வேளாண் உதவி இயக்குநர் சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்து பயனடைய வேண்டுமென வேளாண் உதவி இயக்குநர் சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கோடை மழையால் விளைநிலங்கள் ஈரமாகியுள்ளது. இந்த மழை ஈரத்தைக் கொண்டு உடனடியாக கோடை உழவு செய்து களை, பூச்சி மற்றும் பூஞ்சான வித்துக்களை அழித்து மண்ணின் வளத்தை பெருக்கலாம். அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தொடர்ந்து கோடை உழவு செய்தால் நேரடி விதைப்பில் களைகளின் பாதிப்பு இல்லாமல் பயிர்களை காக்க முடியும். மேலும் களைக்கொல்லி பயன்பாட்டை குறைத்து மண் வளத்தை பாதுகாக்கலாம். குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மண்ணுக்கு வளம் சேர்க்கும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இட்டு மகசூலை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தரமான விதை மற்றும் உயிர் உரங்கள் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உயர் விளைச்சல் தரும் வேளாண்மை தொழில் நுட்பங்களை உழவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்க வேளாண் துறை அலுவலர்கள் தயாராக உள்ளனர். எனவே, இருக்கின்ற மண் ஈரத்தைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வேளாண் பொறியியல் துறையில் குறைந்த வாடகையில் நிலம் சமன்படுத்தும் கருவியை பெற்று நிலத்தை சமன் செய்து கொள்ளலாம்.
நிலத்தடி நீராதாரத்தை பெருக்கவும், மீன் வளர்க்கவும் விவசாயிகள் பாசன நீர் பயன்பாட்டுக்கும் உதவும் பண்ணை குட்டைகள் 100 சதவீத மானியத்தில் அமைக்க வேளாண்மை பொறியியல் துறை மூலம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு தங்களது பகுதி வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com