பராமரிப்பின்றி பொது சுகாதார கழிப்பறை

கூத்தாநல்லூரில் 4 ஆண்டுகளாகப் பராமரிக்காமல் இருந்து வரும் பொது சுகாதாரக் கழிப்பறை பராமரிக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

கூத்தாநல்லூரில் 4 ஆண்டுகளாகப் பராமரிக்காமல் இருந்து வரும் பொது சுகாதாரக் கழிப்பறை பராமரிக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். 
கூத்தாநல்லூர் நகராட்சி 2-ஆவது வார்டுக்குள்பட்ட அய்யன் தோட்டச்சேரி தெற்குத் தெருவில் உள்ள நகராட்சி பொது சுகாதாரக் கழிப்பறை பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து வருகிறது. இதுகுறித்து, 2-ஆவது வார்டு நகர மன்ற முன்னாள் உறுப்பினர் கருணாநிதி கூறியது: 125--க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இப்பகுதியில் குடிசை வீடுகள் அதிகம் உள்ளன. இந்த குடிசை வீடுகளின் மேலே மின்சாரக் கம்பிகள் தாழ்வாகத் தொங்கிக் கொண்டு செல்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். பலத்தக் காற்று அடித்தால் மின்கம்பிகள் கீற்றுக் கொட்டகைகளின் மீது விழுந்து தீப்பற்றி எரியக்கூடிய ஆபத்தான நிலை உள்ளது. 
கஜா புயலில் சாய்ந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தைப் பொருத்தியபோது, மின்கம்பிகளை இழுத்துக் கட்டாமல் தாழ்வாக விட்டு விட்டனர். இதுகுறித்து, மின்வாரியத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இப்பகுதி மக்களுக்காக நகராட்சியிலிருந்து ரூ. 4 லட்சம் செலவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார கழிப்பறை கட்டப்பட்டது. இக்கழிப்பறையில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக மொத்தம் 10 அறைகள் உள்ளன. மேலும் 2 குளியல் அறைகள்
கட்டப்பட்டுள்ளன.
கழிப்பறைக்கு செல்லும் பாதை தற்போது அடைபட்டு முள்புதர் மண்டியுள்ளது. தவிர கழிப்பறைக்கு தண்ணீர் வரும் குழாய் உடைந்துள்ளது. எனவே, எவ்வித பராமரிப்பும் இல்லாமல், பொது சுகாதாரக் கழிப்பறை பாழடைந்து வருவதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com