அமைச்சருடன் அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் சந்திப்பு

திருவாரூரில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜை தேமுதிக மற்றும் தமாகா நிர்வாகிகள் சனிக்கிழமை சந்திந்து தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினர். 


திருவாரூரில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜை தேமுதிக மற்றும் தமாகா நிர்வாகிகள் சனிக்கிழமை சந்திந்து தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினர். 
 17- ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சரும், அதிமுக திருவாரூர் மாவட்டச் செயலருமான ஆர். காமராஜை, தேமுதிக மற்றும் தமாகா நிர்வாகிகள் தனித்தனியே சந்தித்துப் பேசினர்.  
இந்த சந்திப்பில் தேமுதிக சார்பில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எம். சண்முகராஜ், நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் கே. வைரவநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் என். முத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது மொகைதீன், தமாகா சார்பில் மாவட்டத் தலைவர் எஸ். தினகரன், மாவட்டத் துணைத் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நாகை மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி குறித்தும், தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகள் குறித்தும்  அவர்கள் ஆலோசித்தனர்.
கூட்டணி கட்சியினர்
ஆலோசனை...
மன்னார்குடி கோபாலசமுத்திரம் கீழ வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அமைச்சர் ஆர். காமராஜை கூட்டணி கட்சியினர் சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பாஜக மாவட்டத் தலைவர் பேட்டை சிவா,  பாமக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே. ஐயப்பன், தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.சி. பாலு, புதிய தமிழகம் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் நாகராஜன், நாகை மாவட்டச் செயலாளர் முத்தழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின்  நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். மக்களவைத் தேர்தலில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறவும் மேற்கொள்ள வேண்டிய வியூகம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி: இந்த கூட்டத்தில், மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சியைச் சேர்ந்த அமமுக நிர்வாகியான ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் தங்க. மனோகரன் அக் கட்சியிலிருந்து விலகி, அமைச்சர் ஆர். காமராஜ்  முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
40-க்கு 40...
கூத்தாநல்லூரில் அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளைச் சந்திந்த அமைச்சர் ஆர். காமராஜ் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை
தெரிவித்தார். கூத்தாநல்லூர் அதிமுக அலுவலகத்தில் பாஜக நகரத் தலைவர் சிங்காரவேலன், இந்து முன்னணி நிர்வாகி பாண்டியன், தேமுதிக நகரச் செயலாளர் ஏ.கே.ஆர். காதர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட முன்னாள் செயலாளர் ரெகுபதி பாண்டியன், நகரச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அதிமுக மாவட்டச் செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமான ஆர். காமராஜை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: அதிமுக தலைமையிலான கூட்டணி மிக வலுவானக் கூட்டணியாகும். மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான வேட்பாளரை, இன்னும் இரண்டு தினங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவிப்பார்கள் என்றார்.
பின்னர், பெரியபள்ளி வாயிலுக்குச் சென்ற அமைச்சர் அங்குள்ளவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் பொன். வாசுகிராம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கலியபெருமாள், கூத்தாநல்லூர் நகரச் செயலாளர் பஷீர் அஹம்மது, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் முகம்மது அஷ்ரப் உள்ளிட்டோர் அமைச்சருடன் வந்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com