மன்னார்குடி நகராட்சியில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்

மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.


மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.
 இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள், வர்த்தகர்களை கடுமையாக பாதிக்கும் வகையில், மன்னார்குடி நகராட்சி பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரி  பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வீசிய கஜா புயல் பாதிப்பிலிருந்து மன்னார்குடி பகுதி மக்கள் படிப்படியாக  மீண்டு வரும் நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய வரி விதிப்பு பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
 மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு, இந்த வரி உயர்வு பேரிடியாக உள்ளது. மன்னார்குடி நகர பகுதி மக்கள் மீது வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்டுள்ள கூடுதல் வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்யும்படி நகராட்சி நிர்வாகத்தை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். 
 இதில், காலதாமதம் ஏற்பட்டால் பொதுமக்கள், வர்த்தகர்களை திரட்டி, திமுக சார்பில் போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும். இந்த வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, மன்னார்குடி வர்த்தகர் சங்கம் சார்பில் மார்ச் 19- ஆம் தேதி நடைபெறும் பேரணி மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவளிக்கும் என்று அந்த அறிக்கையில்  டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com