பத்ரகாளியம்மன் கோயிலில் நாளை பெருந்திருவிழா

நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட பழைய நீடாமங்கலம் கிராமத்தில், எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் கோயில் பெருந்திருவிழா திங்கள்கிழமை (மார்ச் 25) நடைபெறுகிறது.


நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட பழைய நீடாமங்கலம் கிராமத்தில், எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் கோயில் பெருந்திருவிழா திங்கள்கிழமை (மார்ச் 25) நடைபெறுகிறது.
இதையொட்டி, கடந்த 18-ஆம் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை பெருந்திருவிழா நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராடும் விழா, காப்பு நீக்குதல் ஆகியன நடைபெறுகின்றன. புதன்கிழமை விடையாற்றியுடன் திருவிழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ஜி.எஸ்.வி. நாராயண அய்யர், கிராமத் தலைவர் கே. பரமசிவம், செயலாளர் கே. அன்பழகன் மற்றும் இளைஞர் பொதுநலப் பேரவையினர்
மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com