ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: நிலம் கொடா இயக்கம் தொடக்கம்: பி.ஆர். பாண்டியன் தொடங்கி வைத்தார் 

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள இருள்நீக்கி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள இருள்நீக்கி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களுக்கு நிலம் கொடா இயக்கத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இருள்நீக்கி கிராமத்தில் நிலம் கொடா இயக்கத்தைத் தொடங்கி, அதன் கல்வெட்டையும் பி. ஆர். பாண்டியன் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால், நாகப்பட்டினம், கோடியக்காடு வரை சுமார் 50 லட்சம் ஏக்கர் விளைநிலங்களையும், வங்கக் கடல் பகுதியையும் வேதாந்தா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு விற்பனை செய்ததின் மூலம் ஒட்டுமொத்த தமிழகமும் போராட்டக் களமாக மாறும்.
போராட்டத்தில் சமரசமின்றி ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் அரசியல் ரீதியாக பிரிக்கும் சூழ்ச்சியில் அரசு ஈடுபட்டு 
வருகிறது. 
எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையோடு செயல்பட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதித்து, அமைதியை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றார் பி.ஆர். பாண்டியன். 
முன்னதாக, நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் செந்தில்குமார், கோட்டூர் வடக்கு ஒன்றியத் தலைவர் சேகர், செயலாளர் இராவணன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் பாலமுருகன், கோட்டூர் கனகராஜ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com