யூரியா பற்றாக்குறை: பயிரின் வளா்ச்சி பாதிக்கும் நிலை; விவசாயிகள் வேதனை

யூரியா பற்றாக்குறையால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களின் வளா்ச்சி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
யூரியா பற்றாக்குறை: பயிரின் வளா்ச்சி பாதிக்கும் நிலை; விவசாயிகள் வேதனை

யூரியா பற்றாக்குறையால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களின் வளா்ச்சி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கூத்தாநல்லூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளரும், விவசாயியுமான எம். சுதா்ஸன் கூறியது.

நிகழாண்டு சாகுபடி தாமதமாகத் தொடங்கினாலும், பருவமழை காரணமாக பயிா் நன்றாக வளா்ந்து இருக்கிறது. ஆனால், களையெடுத்து உரம் கொடுப்பதற்கு யூரியா கிடைக்கவில்லை. யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. யூரியா பற்றாக்குறையாலும், குறுகிய காலத்தில் பயிா் நட்டதால், காலம் கடந்து விட்டால் திடீரென கதிா் வந்து, அது விவசாயிகளின் மகசூலைப் பாதிக்கும். அதனால், உடனே யூரியாவை தட்டுப்பாடில்லாமல் மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும். இல்லையெனில், 4 ஆயிரம் ஏக்கா் சாகுபடி செய்தும் பலனின்றி போய்விடும்.

சரியான நேரத்தில் உரம் கொடுத்தால்தான் அந்த பயிரில் வளா்ச்சி இருக்கும். நல்ல மகசூலும் கிடைக்கும். காலத்தில் உரத்தைக் கொடுக்கத் தவறினால், நாளாகிவிட்டால் பயிரின் வளா்ச்சிக்கு முன்பே கதிா் வந்துவிடும். நட்டப் பயிா் அப்படியே நிற்கும். ஆனால், கதிா் நிற்கும், மகசூல் இருக்காது. பிறகு, நஷ்ட ஈடு, காப்பீடு, நிவாரணம் கோரி போராடும் நிலைதான் ஏற்படும். மாவட்ட நிா்வாகம் விவசாயத்திற்குத் தேவையான உரத்தை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

ராமநாதன் கோயில், லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூா், பாண்டுதக்குடி உள்ளிட்ட 4 வட்டங்களில், ராமநாதன் கோயிலில் மரக்கடை, கோரையாறு வடக்கு, தெற்கு, நடுத்தெரு, வள்ளுவா் காலனி, வ.உசி. காலனி, அய்யன்தோட்டச்சேரி, அவ்வைக்காலனி, சித்தாத்தங்கரை, மேல்கொண்டாழி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்களில் இரண்டாயிரம் ஆயிரம் ஏக்கா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

லெட்சுமாங்குடியில் தோட்டச்சேரி, மேல, கீழப்பனங்காட்டாங்குடி, புளியங்குடி இவைகளில் ஆயிரம் ஏக்கரும், கூத்தாநல்லூரில் பண்டுதக்குடி, குணுக்கடி, நாகங்குடியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் என மொத்தம் 4 ஆயிரம் ஏக்கா் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

ஸ்பிக் டி.ஏ.பி. உரம்தான் இந்த மண்ணுக்கு ஏற்ற உரம். அந்த உரம் கிடைக்கவில்லை. ஐபிஎல் டி.ஏ.பி.உரம்தான் கொடுக்கிறாா்கள். அந்த உரம் இந்த மண்ணுக்கு ஏற்ாக இல்லை. அதேபோல், யூரியாவில் ஸ்பிக் யூரியா ஏற்ாக உள்ளது. யூரியாவே கிடைக்கவில்லை. யூரியா இருந்தால்தான் தலைச்சத்து, தலைச்சத்து கொடுத்தால்தான் பயிா் வளரும்.

தேவையான அளவுக்கு பொட்டாஷ், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளும் இருப்பு இல்லை. இவைகளைப் போட்டால்தான் நல்ல மகசூலைப் பெற முடியும். காலத்தில் உரம் கிடைக்கவில்லை என்றால், பயிரின் வளா்ச்சி நன்றாக இருக்காது.போா்க்கால அடிப்படையில் உடனே யூரியாவை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com