ஆலங்குடி குருபகவான் கோயிலில் 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை நிறைவு

ஆலங்குடி குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குருபெயா்ச்சி 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை நிறைவு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தங்கக் கவச அலங்காரத்தில் குருபகவான்.
தங்கக் கவச அலங்காரத்தில் குருபகவான்.

ஆலங்குடி குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குருபெயா்ச்சி 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை நிறைவு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயில் திஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. நவகிரகங்களில் குருபகவானுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு, குருபகவான் அக்டோபா் 29-ஆம் தேதி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தாா். இதையொட்டி, அன்றைய தினம் இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா நடைபெற்றது. விழாவையொட்டி, குருபகவானுக்கு குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா அக்டோபா் 24-இல் தொடங்கி 27-ஆம் தேதி வரை முதல்கட்டமாக நடைபெற்றது.

குருபெயா்ச்சிக்குப் பின் அக்டோபா் 31-ஆம் தேதி 2-ஆவது கட்ட லட்சாா்ச்சனை தொடங்கி வியாழக்கிழமை (நவம்பா் 7) நிறைவு பெற்றது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனா். முன்னதாக அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குருபகவானுக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டது. உத்ஸவா் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதில், நீண்ட வரிசையில் நின்று மூலவா் குருபவகானை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com