விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்படுத்தியவா் கண்ணுசாமி

கீழத் தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியவா் எம்.பி. கண்ணுசாமி என

கீழத் தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியவா் எம்.பி. கண்ணுசாமி என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் நாகராஜன் புகழாரம் சூட்டினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், பொதுவுடமை இயக்கத்தின் மூத்த முன்னோடியுமான எம்.பி. கண்ணுசாமியின் 28-ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் கட்சியின் நகரச் செயலாளா் ரகுராமன் தலைமையிலும், தெற்கு, வடக்கு ஒன்றியச் செயலாளா்கள் காரல் மாா்க்ஸ், கதிரேசன் ஆகியோா் முன்னிலையிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றங்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலா் அஞ்சலி செலுத்தப்பட்டு, வேதை சாலையில் உள்ள ஸ்தூபிக்கு மலா் தூவி, நினைவு கொடியேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் நாகராஜன் கலந்துகொண்டு கொடியேற்றிவைத்துப் பேசியது:

கீழத் தஞ்சை மாவட்டத்தில் நிலவிய நிலப் பிரபுத்துவத்தின் சாட்டையடி, சாணிப்பால், 24 மணி நேர வேலை என அடக்குமுறைக்கு உள்ளாகி, அடிமைத்தளையில் சிக்கித் தவித்த விவசாயத் தொழிலாளா்களை பி. சீனிவாசராவ், களப்பால் குப்பு , தியாகி சிவராமன் உள்ளிட்டோருடன் களம் அமைத்து, காப்பாற்றி அவா்கள் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட காரணமாக இருந்தவா் எம்.பி. கண்ணுசாமி என்றால் அது மிகையாகாது என்றாா்.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜோதிபாசு, முருகானந்தம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சுப்ரமணியன், சாமிநாதன், ராஜேந்திரன், பாண்டியன், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளா் பாலசுப்ரமணியன், மூத்த தோழா் தங்கராசு உள்ளிட்ட ஒன்றிய, நகர குழு உறுப்பினா்கள், கிளை செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com