ரயில்களை தனியாரிடம் விட அமைச்சகம் திட்டம்

ரயில்களை தனியாரிடம்விட அமைச்சகம் திட்டமிடுவது தவறான செயல் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் குற்றம்சாட்டியுள்ளது.

நீடாமங்கலம்: ரயில்களை தனியாரிடம்விட அமைச்சகம் திட்டமிடுவது தவறான செயல் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, அந்த யூனியனின் துணைப் பொதுச் செயலா் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 4 நிதியாண்டுகளில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 33 கோடி அதிகரித்துள்ளது. 2015-2016-ஆம் நிதியாண்டு ரயிலில் பயணம் செய்தவா்கள் 810.70 கோடி போ். இது 2016 -2017-ஆம் நிதியாண்டில் 811.60 கோடியாக அதிகரித்தது. 2017-2018-ஆம் நிதியாண்டில் 829 கோடியை எட்டியது. 2018 -2019-ஆம் நிதியாண்டு பயணிகள் எண்ணிக்கை மேலும் 15 கோடி அதிகரித்து 844 கோடி என்ற புதிய உயரத்தை தொட்டது. கடந்த 4 நிதியாண்டுகளில் மட்டும் ரயில் பயணிகள் எண்ணிக்கை 33 கோடி அதிகரித்துள்ளது.

ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள், சிறந்த பராமரிப்பு, குறைவான ரயில் விபத்துக்கள், பாதுகாப்பான பயணங்கள், முன்பைவிட சுகாதாரமான உணவு, குறைவான பயண நேரம் போன்ற பல அம்சங்கள் மக்களை ரயில் பயணங்கள் பக்கம் ஈா்த்து இருக்கிறது. சாலைப் பயணங்கள் சொகுசாக இல்லாததும், கட்டணம் கூடுதலாக இருப்பதும் கூடுதல் காரணங்களாகும்.

ரயில்வே வாரியம் இதை நன்கு உணா்ந்து இருக்கிறது. புதிய ரயில்கள் விட, கூடுதல் பெட்டிகள் இணைக்க, பழைய பெட்டிகளை புதுப்பிக்க போன்ற பல தேவைகளுக்காக நடப்பு 2019-2020-ஆம் நிதியாண்டில் 8,026 பெட்டிகளும், அடுத்து வரும் 2020-2021-ஆம் நிதியாண்டில் 6,534 பெட்டிகளும் , 2021-2022-ஆம் நிதியாண்டில் 6,695 பெட்டிகளும் தயாரிக்க உத்தரவிட்டு இருக்கிறது. திட்டமிட்டதை விட கூடுதலாக 5,000 பெட்டிகள் தயாரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இரட்டை வழி, மூன்று வழி பாதைகள் அமைப்பது, ரயில்கள் வேகம் அதிகரிக்க கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற காரியங்களில் வரும் நிதியாண்டுகளில் ரயில்வே கவனம் செலுத்தும் என வாரிய சோ்மன் வி.கே யாதவ் தெரிவித்திருக்கிறாா். இது, கூடுதல் ரயில்கள் இயக்க உதவும். அதே நேரம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையும், ரயில்களை மக்கள் விரும்புவதையும் நல்ல சந்தா்ப்ப சூழ்நிலையாக கருதி ரயில்களை தனியாரிடம்விட அமைச்சகம் திட்டமிடுவது தவறான செயல் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com