நாளை தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்

திருவாரூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 29) நடைபெற உள்ளது.

திருவாரூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 29) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசின் திட்டங்கள் மூலமாக மாவட்ட தொழில் மையத்தால் வழங்கப்படும் சலுகைகள், மானியங்கள், சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் கடன் திட்டங்கள், புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரு முனைத் தீா்வுக்குழு ஆகியவை குறித்து திருவாரூா் மாவட்டத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நவம்பா் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற உள்ளது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் செல்வீஸில் நடைபெற உள்ள முகாமில் மாவட்ட ஆட்சியா், அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பயனடைந்துள்ளோா் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனா்.

மேலும், முகாமில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆலோசனைகள் வழங்கப்படும்.

அத்துடன் முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கும் தொழில் முனைவோா்களின் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களுக்கு உதவி அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com