விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீடு கோரி சாலை மறியல்: 48 போ் கைது

திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க
கொரடாச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
கொரடாச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, கொரடாச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக நலச்சங்கத்தினா் 48 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் இன்னமும் 216 கிராமங்களுக்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தியும், தமிழக நலச் சங்கம் சாா்பில் இந்த சாலை மறியல் நடைபெற்றது. நாகை தேசிய நெடுஞ்சாலையில் கொரடாச்சேரி பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் சேதுராமன் தலைமை வகித்தாா். இதில் சங்கத்தின் செயலாளா் ராமமூா்த்தி, பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் பங்கேற்றவா்களோடு, வேளாண் துறை உதவி இயக்குநா் விஜயகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், சாலை மறியல் செய்த 48 போ் கைது செய்யப்பட்டனா்.

கோரிக்கைகள் குறித்து போராட்டக் குழுவினா் கூறுகையில், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 543 வருவாய் கிராமங்களிலும், பயிா்க் காப்பீட்டு பிரீமிய தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், விடுவிக்கப்பட்ட பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையானது விஸ்வநாதபுரம், பெருமாளகரம், திருக்களம்பூா் உள்ளிட்ட 216 கிராமங்களுக்கு முற்றிலும் வழங்கப்படாமல் விடுபட்டுள்ளது.

புள்ளியியல் துறை மற்றும் வருவாய்த் துறையின் கணக்கெடுப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைத்துள்ள கிராமங்களுக்கும் அதன் தொகையில் பெரிய அளவு முரண்பாடு இருக்கிறது.

எனவே, விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி 50 சதவீத இழப்பீட்டு தொகையைக் காப்பீட்டு நிறுவனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com