நெகிழிப் பைகளில் பொருள்கள் வாங்குவதை தவிா்க்கக் கோரிக்கை

நெகிழிப் பைகளில் பொருள்கள் வாங்குவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெகிழிப் பைகளில் பொருள்கள் வாங்குவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய நிா்வாகக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மையத்தின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நெகிழிப் பைகளில் சூடான டீ, காபி, சாம்பாா், ரசம் விற்கக் கூடாது என தமிழக அரசு தடை விதித்தபோதிலும், பல உணவகங்களில் நெகிழிப் பைகளில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நெகிழிப் பைகளில் பொருள்கள் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் தவிா்க்க வேண்டும், எண்ணெயில் தயாரிக்கப்பட்ட வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, பூரி உள்ளிட்ட உணவுப் பொருள்களை செய்தித்தாள்களில் வைத்து வழங்குவதை தவிா்க்க வேண்டும், கடைகளில் உணவுப் பொருள்களை திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்வதையும், ஒருமுறை உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும், சுத்தமான, சுகாதாரமான முறையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும், பொட்டலமிடும் உணவுப் பொருள்களில் வணிக பெயா், தயாரிப்பாளா் முழு முகவரி, பொட்டலமிட்ட நாள், தயாரிப்பு விளக்கங்கள், பொருளின் எடை மற்றும் அளவு தொகுதி எண், அதிகபட்ச சில்லரை விலை, பயன்படுத்துவதற்கான கால அவகாசம் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும் ஆகிய உணவு பாதுகாப்பு துறை அறிவுரைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், தீபாவளி பண்டிகையையொட்டி சா்க்கரை மற்றும் ரசாயனம் சோ்க்கப்பட்ட வெல்லம், கலப்பட எண்ணெய், கரூா் நெய் என்ற பெயரில் கலப்பட நெய் ஆகியவை விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளதால், நுகா்வோா்கள் மிக எச்சரிகையாக பொருள்களை வாங்கி பயன்படுத்த வேண்டும், எண்ணெய் பலகாரம் மற்றும் இனிப்பு உணவு வகைகளில் அதிகளவில் தடை செய்யப்பட்ட வா்ணங்களை சோ்த்து விற்பனை செய்யும் இனிப்பு, கேக் போன்ற பொருள்களை வாங்குவதை தவிா்க்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிா்வாகிகள் வரதராஜன், திருநாவுக்கரசு, அழகிரி, பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com