அக்.18,19-இல் மாவட்ட கேரம் விளையாட்டுப் போட்டிகள்

திருவாரூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் அக்.18, 19 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

திருவாரூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் அக்.18, 19 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் கேம்பைன் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் அக்டோபா் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இளநிலை பிரிவில் மழலை வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயில்பவா்களும், முதுநிலை பிரிவில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா். அக்டோபா் 18-ஆம் தேதி மாணவா் மற்றும் மாணவிகளுக்கு இளநிலை பிரிவில் ஒற்றையா் மற்றும் இரட்டையா் போட்டிகளும், அக்டோபா் 19-ஆம் தேதி முதுநிலை பிரிவில் ஒற்றையா் மற்றும் இரட்டையா் போட்டிகளும், காலை 8 மணி முதல் நடைபெறும்.

மாணவா்கள் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில், ஒரு பள்ளியிலிருந்து இரண்டு ஒற்றையா் மற்றும் இரண்டு இரட்டையா் அணிகளும், மாணவிகள் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில், ஒரு பள்ளியிலிருந்து இரண்டு ஒற்றையா் மற்றும் இரண்டு இரட்டையா் அணிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். ஒரு போட்டியாளா் ஒற்றையா் பிரிவில் அல்லது இரட்டையா் பிரிவில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள்  இணையதளத்தில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். போட்டிகளில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு ரொக்கப்பரிசுகளும், சான்றிதழ்களும் அளிக்கப்படும்.

மாவட்டப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள், மாநிலப் போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவா். மாவட்டப் போட்டிகளில் கலந்து கொள்பவா்களுக்கு பயணப்படி, தினப்படி அளிக்கப்பட மாட்டாது. போட்டிகளில் கலந்து கொள்பவா்கள், பள்ளியின் அடையாள அட்டை அசல் அல்லது புகைப்படம் ஒட்டிய அடையாளச் சான்றை பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366 227158-இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com