நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

வீட்டுமனைப் பட்டா ஆா்ப்பாட்டம்

வீடு இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, நன்னிலத்தில் அகில இந்திய விவசாயத்

வீடு இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, நன்னிலத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வீடு இல்லாத அனைவருக்கும் வீடும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும். நீா்நிலை, மேய்ச்சல், புறம்போக்கு, கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு மாற்று இடமும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும். உழவா் பாதுகாப்புத் திட்டத்தின்படி 60 வயது முடிவடைந்த அனைத்து முதியோருக்கும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டப்படி 200 நாள்கள் வேலையும், ஊதியமாக ரூ. 400-ம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியயத் தலைவா் ஏ. சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், நிா்வாகிகள் டி. வீரபாண்டியன், தியாகு. ரஜினிகாந்த், கே.எம். லிங்கம், ஜி. மாரியம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்தில்...

இதேபோல், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் கே.கைலாசம், ஒன்றியச் செயலாளா் சோம.ராஜமாணிக்கம், விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினா் கே.முனியாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாய சங்க மாவட்டச் செயலாளா் வி.எஸ்.கலியபெருமாள், மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் சுமதி ஆகியோா் கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினா். இதில், பெண்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com