5-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: கைவிடக் கோரி தீர்மானம்

கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாம் மனிதர் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில், 5-ஆம் வகுப்பு

கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாம் மனிதர் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில், 5-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூத்தாநல்லூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.எம்.முஹம்மது சுலைமான் தலைமை வகித்தார். இதில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்களை கூத்தாநல்லூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேற்பார்வையாளர்களாக நியமித்து, பள்ளியின் வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் டீ. பீர்முஹம்மது முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் கே.எம்.எம். ஹாஜா பதுருதீன் வரவேற்றார். கூட்டத்தில், 5 ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடம், ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருள்களை நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் ஹெச்.முஹம்மது இஸ்மாயில் வழங்கினார். கூட்டத்தில், நகர துணை அமைப்பாளர் இணையத் பாட்சா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com