ஊட்டச்சத்து உணவுக் கண்காட்சி

திருவாரூர் பகுதியில் ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. 
ஊட்டச்சத்து உணவுக் கண்காட்சி

திருவாரூர் பகுதியில் ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. 

திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து மாதம், மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் பதிவு செய்து, திருவாரூர், கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களிலும், ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. அத்துடன், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

வலங்கைமானில்...

நீடாமங்கலம், செப். 22: இதேபோல், வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவுப் பாதுகாப்பு மன்றம் சார்பில், போஷான் அபியான் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவுக் கண்காட்சி நடைபெற்றது. தலைமையாசிரியை ர.பரிமளா தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத்தலைவர் சா.குணசேகரன் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசுகளை வழங்கினார். பள்ளி உணவுப் பாதுகாப்பு மன்றம், நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் சார்பில் உப்பில் அயோடின் பரிசோதனைகளை செய்து காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கண்காட்சியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் எஸ்.மூர்த்தி, துணைத்தலைவர் எஸ்.டி.காமராஜ், செயற்குழு உறுப்பினர் பஞ்சமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com