பள்ளி மாணவர்களுக்கு கண், பல் மருத்துவ முகாம்

கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளி மாணவர்களுக்குக் கண் மற்றும் பல் நோய் கண்டறியும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளி மாணவர்களுக்குக் கண் மற்றும் பல் நோய் கண்டறியும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் விக்டரி லயன்ஸ் சங்கம் மற்றும் எலைட் பல் மருத்துவமனை, கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளியுடன் இணைந்து, அப்பள்ளியில் நடத்திய இந்த முகாமுக்கு, லயன்ஸ் சங்கத் தலைவர் டாக்டர் கே.எம். முகம்மது இக்பால்தீன் தலைமை வகித்தார். சமூக நல அலுவலர் பாரூக் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜோஸ்பின் லாரன்ஸ் வரவேற்றார். முகாம் ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் கே.எம்.ஏ.அஷ்ரப் அலி ஒருங்கிணைத்தார்.
முகாமில், பல் மருத்துவர்கள் கே.எம்.எப். பிர்னாஸ், ராஜ்குமார், கண் மருத்துவர்கள் ஜமுனா, சுருதி மற்றும் செவிலியர்களைக் கொண்ட மருத்துவக் குழுவினர்கள், 190 மாணவர்களுக்கு கண் மற்றும் பல் பரிசோதனை செய்தனர். இதில், 60 மாணவர்களுக்கு பார்வைக் குறைபாடுகளும், 30 மாணவர்களுக்கு பல்லில் குறைபாடுகளும் இருப்பது கண்டறியப்பட்டது. முகாமில், லயன்ஸ் சங்க நிர்வாகி ஏ. அப்துல் சலாம், பொருளாளர் எஸ். மனோஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பள்ளியின் ஆங்கிலத் துறைத் தலைவர் ஏ.கே. எழில் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com