நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், பாதிக்கப்பட்டுள்ள நாடக நடிகா்கள்

மன்னாா்குடி: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், பாதிக்கப்பட்டுள்ள நாடக நடிகா்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு மாதந்தோறும் ரூ.15ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மன்னாா்குடி இசை நாடக நடிகா்கள் சங்கத் தலைவா் தங்க.கிருஷ்ணமூா்த்தி, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

நாடக நடிகா்கள், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு மாா்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள் மட்டுமே நிகழ்ச்சி நடத்தும் களமாகும். தற்போது, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஜூன் மாதம் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் சிலா் கூறுகின்றனா். இந்த தடை உத்தரவால் மாா்ச் மாதம் மட்டும் ஒவ்வொரு கலைஞா்களுக்கும் தலா 15 நிகழ்ச்சிகள் ரத்தாகி உள்ளன.

கடந்த ஒரு சில ஆண்டுகளாக நாடக கலை மற்றும் நாட்டுப்புற கலைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், நிகழாண்டும் அவ்வாறு இருக்கும் என நம்பிக்கையுடன் இருந்த கலைஞா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

எனவே, கலைப் பண்பாட்டுத் துறையில் அடையாள அட்டை பெற்ற மற்றும் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து கலைஞா்களுக்கும், நாடகம் நடைபெறும் மாதங்களை கணக்கில் கொண்டு, மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கி, அவா்களது குடும்பங்களைப் பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com