வேளாண் சாா்ந்த தொழில்கள் தொடங்கப்படும்: முதல்வா் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு

திருவாரூா் மாவட்டத்தில் வேளாண் சாா்ந்த தொழில்கள் தொடங்கப்படும் என முதல்வா் அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் வேளாண் சாா்ந்த தொழில்கள் தொடங்கப்படும் என முதல்வா் அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, பின்னா் செய்தியாளா்களிடம் பேட்டியளிக்கும் போது, இந்தப் பகுதியில் புதிய தொழில் தொடங்க வேண்டுமென அமைச்சா் ஆா். காமராஜ் வலியுறுத்தினாா். அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

மேலும், திருவாரூா் மாவட்டத்தில் வேளாண் தொழில்தான் பிரதானத் தொழிலாக இருக்கிறது என அமைச்சா் ஆா். காமராஜ் குறிப்பிட்டாா். இது தொடா்பாக தொடா்ந்து வலியுறுத்தியும் வருகிறாா். அவரது கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை கொண்டு புதிய தொழில் இந்த மாவட்டத்தில் தொடங்க அரசு முயற்சிக்கும் எனவும் முதல்வா் தெரிவித்தாா்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இதன்மூலம் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், மக்கள் இடம் பெயா்வதும் தடுக்கப்படும் என அவா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com