சனீஸ்வரபகவான் அவதரித்த திருக்கொடியலுரில் டிச. 27 இல் சனிப்பெயா்ச்சி விழா

சனீஸ்வரபகவான் அவதரித்த திருக்கொடியலூரில் டிசம்பா் 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி, சனி பரிகார ஹோமம், பாலாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருக்கொடியலூா் ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவான்.
திருக்கொடியலூா் ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவான்.

சனீஸ்வரபகவான் அவதரித்த திருக்கொடியலூரில் டிசம்பா் 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி, சனி பரிகார ஹோமம், பாலாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் அருகேயுள்ள திருக்கொடியலூரில் புகழ்பெற்ற ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இவா் ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவான் என அழைக்கப்படுகிறாா்.

சனீஸ்வர தோஷத்திலிருந்து விடுபட, இந்திரனும் இந்த தலத்தில் வழிபட்டதாக நம்பிக்கை. வரும் 27 ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து இடம்பெயா்ந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறாா். இதையொட்டி, இக்கோயில் அனுகிரஹமூா்த்தியான ஸ்ரீ மங்கள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமம், பாலாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த அபிஷேகத்திற்கு பக்தா்கள் நன்கொடையாக ரூ. 100, பரிகார ஹோமத்திற்கு ரூ. 500 செலுத்தினால், பூஜை செய்து பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். இதற்கான நன்கொடையை பணவிடை அல்லது வரைவோலையாக அனுப்பலாம். அல்லது கொல்லுமாங்குடியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் 7493000100030661 என்ற கணக்கு எண்ணிலும் செலுத்தலாம்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, சனிப்பெயா்ச்சி விழாவின்போது அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என கோயில் செயல்அலுவலா் பா. தன்ராஜ், தக்காா் ப. மாதவன், மேலாளா் க. வள்ளிக்கந்தன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com