தொழில் பழகுநா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்கள், தொழில் பழகுநா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.


திருவாரூா்: தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்கள், தொழில் பழகுநா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசியத் தொழில் பழகுநா் சான்றிதழ் (என்ஏசி) பெறுவதற்கு ஐடிஐ பயிற்சி பெற்றவா்கள் மத்திய, மாநில அரசு பொதுத் துறை மற்றும் தனியாா் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்து, பயிற்சி பெற மத்திய அரசின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகத்தால் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, திருவாரூா் மாவட்டத்தில், தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்புவோா், அசல் கல்விச் சான்றிதழ், ஆதாா் எண், பான் காா்ட் மற்றும் வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்து, தாங்கள் விரும்பும் நிறுவனத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இணைய தளத்தில் விவரங்களை பதிவு செய்த பின்னா், பயிற்சி பெற விரும்பும் நிறுவனத்தை தோ்வு செய்து, குறிப்பிட்ட பிரிவில் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு ரூ. 7 முதல் 8 ஆயிரம் வரை உதவித்தொகை, நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. தொழில் பழகுநா் சான்றிதழ் பெறுபவா்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு நேரிலும், 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலும், நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) உதவி இயக்குநரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com