கூத்தாநல்லூரில் ஆற்றை தூர்வாரும் போது 18 வார்டுகளுக்குச் செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு 

கூத்தாநல்லூரில் ஆற்றை தூர்வாரும் போது, 18 வார்டுகளுக்குச் செல்லுக் கூடிய குடிநீர் குழாய் உடைந்தது. நகராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை சரி செய்தது. 
கூத்தாநல்லூரில் ஆற்றை தூர்வாரும் போது 18 வார்டுகளுக்குச் செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு 

கூத்தாநல்லூரில் ஆற்றை தூர்வாரும் போது, 18 வார்டுகளுக்குச் செல்லுக் கூடிய குடிநீர் குழாய் உடைந்தது. நகராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை சரி செய்தது. 

கூத்தாநல்லூர் நகராட்சி யின் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி, சென்ட்ரல் மீன் மார்க்கெட் அருகில், மேல்கொண்டாழி 14 ஆவது வார்டில் அமைந்துள்ளது. இந்த குடிநீர் தொட்டியிலிருந்துதான் மேற்கு பக்கம் கோரையாறு பகுதிக்கும், கிழக்குப் பக்கமான நாகங்குடி பகுதி வரைக்கும், 18 வார்டுகளுக்கு இங்கிருந்துதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதிகள் பெரும்பாலும் குடிசை வாழ் மக்கள்தான் அதிக அளவில் வசிக்கின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் எதிரே வெண்ணாறு ஓடுகிறது. 

இந்த ஆற்றில், கடந்த 25 ஆம் தேதி, திங்கள்கிழமை, ஜேசிபி இயந்திரம் மூலம், மண்களை அகற்றி, தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. இப்பணியின் போது, ஆற்றின் ஓரத்தில் இருந்த, குடிநீர் குழாய் உடைக்கப்பட்டுள்ளது. இதில், குழாய் உடைப்பு எடுக்கப்பட்டு, குடிநீர் முழுவதும் ஆற்றில் வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டு விட்டன என அப்பகுதியின் சமூக ஆர்வலர் பெ.முருகேசு தெரிவித்தார். இதுகுறித்து, நகராட்சி ஆணையர் லதாவிடம் விசாரித்தபோது, அவர் கூறியது,

மீன் மார்க்கெட் அருகேயுள்ள  மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி 8 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தொட்டியாகும். கூத்தாநல்லூர் வெண்ணாற்றில், பொதுப்பணித் துறையினர் ஜேசிபி மூலம் தூர்வாரும் போது, குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு விட்டது. இதனால், 10, 12, 14, 23, 24 உள்ளிட்ட 18 வார்டுகளுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிதண்ணீர் அனுப்ப முடியவில்லை. ஆனால், லாரியின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டன. இன்று, வியாழக்கிழமை, உடைப்பு எடுக்கப்பட்ட குழாயை சரி செய்யப்பட்டு, இரும்பு ராடு வைத்து கான்கிரீட் போடப்பட்டுள்ளன.

மேலும், இதற்கான செலவீனத்தை, பொதுப்பணித் துறையினர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர் என ஆணையர் லதா தெரிவித்தார். ஆய்வின் போது, நகராட்சி பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com