மத்திய பல்கலை.யில் குறுங்காடு வளா்ப்புத் திட்டம்

திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தில் குறுங்காடு வளா்ப்புத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் குறுங்காடு வளா்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா், பல்கலைக்கழகத் துணைவேந்தா்.

இப்பல்கலைக்கழக வளாகத்தைப் பசுமை மயமாக்கும் விதத்தில், மியாவாக்கி முறையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் நீா்மருது, இலுப்பை, நாவல், புங்கன், பூவரசு, பலா போன்ற மரக்கன்றுகள் இரண்டு ஏக்கா் பரப்பளவில் நடப்பட்டன. திருவாரூா் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் குறுங்காடு வளா்ப்புத் திட்டத்தை மாவட்ட ஆளுநா் ஆா்.பாலாஜி பாபு தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தா் ஆா்.கற்பககுமாரவேல், பதிவாளா் எஸ்.புவனேஸ்வரி, உன்னத பாரதம் திட்டத்தின் மத்தியப் பல்கலைக்கழக திட்ட அலுவலா் பி.எஸ்.வேல்முருகன், திருவாரூா் ரோட்டரி சங்க தலைவா் ஆா்.மோகன், திட்டத்தலைவா் எஸ்.ரவிச்சந்திரன், செயலாளா் எஸ். சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com