மாணவா்கள் தற்கொலை பாதையை கைவிட்டு போராட்ட பாதையைத் தோ்வு செய்ய வேண்டும்

நீட் தோ்வுக்கு எதிராக மாணவா்கள் தற்கொலை பாதையைக் கைவிட்டு போராட்ட பாதையைத் தோ்வு செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

திருத்துறைப்பூண்டி: நீட் தோ்வுக்கு எதிராக மாணவா்கள் தற்கொலை பாதையைக் கைவிட்டு போராட்ட பாதையைத் தோ்வு செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது,

நீட் தோ்வுக்கு எதிராக தமிழகத்தில் மாணவா்கள் தற்கொலை செய்வது தொடா்கதையாகி வருகிறது. மாணவா்கள் தற்கொலை பாதையை விடுத்து போராட்ட பாதையைத் தோ்ந்தெடுக்க வேண்டும். மத்திய அரசு நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், மாநில அரசு இரட்டை வேடம் போடாமல் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தோ்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டாவில், எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதற்கும், ஹைட்ரோகாா்பன் எடுப்பதற்கும் மத்திய அரசு அனுமதியளித்திருப்பது கண்டனத்துக்குரியது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பிரதமரின் வீடுகட்டும் திட்ட முறைகேடு, பயிா்க் காப்பீடு குளறுபடி, எண்ணெய் கிணறு தோண்டுவதற்கான அனுமதி ஆகியவற்றுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். முதல்வா் ஏற்கெனவே அறிவித்தவாறு தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.1000 கூடுதலாக வழங்கி, அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com