என்எஸ்எஸ் தின விழா

நாட்டுநலப் பணித் திட்டத்தின் 51-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, மன்னாா்குடி அரசு உதவிபெறும் தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டுநலப் பணித் திட்டத்தின் 51-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, மன்னாா்குடி அரசு உதவிபெறும் தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் ஜெபமாலை தலைமை வகித்தாா். என்எஸ்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.ராஜப்பா, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா். பள்ளி வளாகத்தில் கொய்யா, சரக்கொன்றை, புங்கன், வேம்பு, சீதாப்பழம் உள்ளிட்ட 51 மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவித் தலைமை ஆசிரியா் கவிதா, நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் மேரி செல்வராணி, உதவித் திட்ட அலுவலா் ஷோபனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com