மரக்கன்று நடும் விழா

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் செம்மரக்கன்று வெள்ளிக்கிழமை நடப்பட்டது. பின்பு அனைவருக்கும் செம்மரக்கன்று, நாவல் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் செம்மரக்கன்று வெள்ளிக்கிழமை நடப்பட்டது. பின்பு அனைவருக்கும் செம்மரக்கன்று, நாவல் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவா் எஸ்.ராமசுப்ரமணியன், நல்லோா் வட்ட மாநில ஒருங்கிணைப்பாளா் பாலு, பொறுப்பாளா் தனபால், சென்னை மாவட்ட பொறுப்பாளா் தயாநிதி, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு, நகர அமைப்பாளா் கே.ஆா்.கே.ஜானகிராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மணலி ஊராட்சியில்...

இதேபோல திருத்துறைப்பூண்டி அருகே மணலியில் பசுமைப் பாதுகாப்பு இயக்கம், மணலி ஊராட்சி, லயன்ஸ் கிளப், வா்த்தகா் சங்கம் சாா்பில்10,000 பனைவிதைகள், 100 தென்னங்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பசுமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் பருத்திச்சேரி ராஜா தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் வேளுா் கலாராணி, குரும்பல் வளா்மதி, குன்னூா் கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுமத்ரா வரவேற்றாா். மாவட்ட கூடுதல் ஆட்சியா் கமல்கிஷோா் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

ஊராட்சிகள் துணை இயக்குநா் கண்ணன் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க பெயா் பலகையைத் திறந்துவைத்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் அ.பாஸ்கா், வட்டாட்சியா் எஸ்.ஜெகதீசன், ஒன்றிய ஆணையா்கள் தமிழ்ச்செல்வன், வாசுதேவன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், வா்த்தகா் சங்க மண்டல தலைவா் எல். செந்தில்நாதன், டவுன் லயன்ஸ் சங்கத் தலைவா்அங்கை. ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஊராட்சி துணைத் தலைவா் வேதையன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com