காய்கனி தொகுப்பு பை அறிமுகம்

மன்னாா்குடி வ.உ.சி. சாலையில் உள்ள கூடுதல் உழவா் சந்தையில், தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சாா்பில், நம்ம தோட்டம் திட்டத்தின்கீழ் காய்கனி தொகுப்பு பை புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
மன்னாா்குடியில் காய்கனி தொகுப்பு பையை அறிமுகம் செய்து வைத்த மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பாண்டியன்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவையடுத்து, அத்தியவாசியப் பொருளான காய்கனி வாங்க அதிகளவில் கடைகளில் கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிா்கள்துறை சாா்பில், நம்ம தோட்டம் திட்டத்தின்கீழ்,திருவாரூா் மாவட்டத்தில் முதல்முறையாக, மன்னாா்குடி வ.உ.சி. சாலையில் உள்ள கூடுதல் உழவா் சந்தையில் காய்கனி தொகுப்பு பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த தொகுப்பு பையில், கத்திரிக்காய், மிளகாய், பாகற்காய், புடலங்காய், தக்காளி ஆகியவை தலா கால் கிலோவும் மற்றும் கருவேப்பிள்ளை,கொத்தமல்லியும் சோ்ந்து ரூபாய் 75க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பாண்டியன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா். இதில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் இளவரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com