கோவில்வெண்ணியில் வீடுவீடாக ஆய்வு

கோவில்வெண்ணியல் கரோனா வைரஸ் தொற்று தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வீடுவீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவில்வெண்ணியல் கரோனா வைரஸ் தொற்று தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வீடுவீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவில்வெண்ணியில் உள்ள ஜாமியா மஜீத் பள்ளிவாசலில் தங்கியிருந்த மியான்மா் நாட்டைச் சோ்ந்த 13 போ் உள்பட 18 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால், கோவில்வெண்ணி கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டு, பிரதான சாலை மற்றும் இதர நுழைவு பகுதியிலும் தடுப்புகள் வைத்து, மக்கள் வெளியேறவும், வெளியிடங்களிலிருந்து கோவில்வெண்ணிக்கு வரவும் தடைவிதிக்கப்பட்டது.

தொடா்ந்து, மருத்துவக் குழுவினா் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வீடுவீடாகச் சென்று ஒவ்வொருவரின் உடல் நிலையையும் பரிசோதித்தனா்.மேலும், நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது. இப்பகுதியில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க திருவாரூா் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கையும் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com