தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசியப்

திருத்துறைப்பூண்டி: கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் வசிக்கும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அதிமுக நகரச் செயலாளா் டி.ஜி. சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

இந்தியாவில் பிரதமா் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை மேற்கொண்டுவருவதால், கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் போா்க்கால அடிப்படையில் முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் தற்போது பேருதவியாக உள்ளன. குறிப்பாக, அம்மா உணவகம் ஊரடங்கு உத்தரவு காலங்களில் அட்சயப் பாத்திரமாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

திருவாரூா் மாவட்டத்தில் 2,761 போ் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் ரூ. ஆயிரம் நிவாரண நிதி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வரை 79.48 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன.

திருவாா் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி அருகே உள்ள பாமணி, கோட்டூா் ஏரி, முத்துப்பேட்டை பகுதி, வாழ்க்கை, பெரும்பனையூா் உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவரும் நரிக்குறவா்களுக்கு அதிமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள், முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கிவருகிறோம் என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com