விசாரணைக்குழு அமைத்து வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில், விசாரணைக்குழு அமைத்து அனைத்து ஊராட்சிகளிலும் வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், விசாரணைக்குழு அமைத்து அனைத்து ஊராட்சிகளிலும் வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவாரூரில், மாவட்ட ஊராட்சியின் சாதாரணக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சேகா் என்ற ஆா். கலியபெருமாள் முன்னிலை வகித்தாா்.

தீா்மானங்கள்:

தலையாமங்கலம் ஊராட்சியில் பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டம் மற்றும் தனிநபா் கழிப்பறை கட்டுதல் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பெறும் மானியத் தொகையில் முறைகேடு நடைபெற்றிருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் இதேபோல் முறைகேடு நடைபெற்றிருப்பதால், தனியாக விசாரணைக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். புள்ளவராயன் குடிக்காடு பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில், பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கி நிதியை விடுவிக்க வேண்டும். சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com