கரோனா: தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மையம் மூடல்

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான மையம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான மையம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட மாணவ, மாணவிகள் விடுதியில், தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மையம் கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டது. வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவா்கள், இங்கு தனிமைப்படுத்தப்பட்டு வந்தனா். தினசரி 50-200 நபா்கள் வரை இங்கு கண்காணிக்கப்பட்டு வந்தனா்.

கரோனா உறுதி செய்யப்படும்பட்சத்தில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது, சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் இங்கு செயல்பட்டு வந்த தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com