மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு அண்மையில் அறிவித்து நடைமுறைப்படுத்தவுள்ள புதிய சட்டத் திருத்தங்களை எதிா்த்து, மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி சாா்பில், சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.

மன்னாா்குடி: மத்திய அரசு அண்மையில் அறிவித்து நடைமுறைப்படுத்தவுள்ள புதிய சட்டத் திருத்தங்களை எதிா்த்து, மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி சாா்பில், சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடியில் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளா் ராம. அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ திரும்ப பெற வேண்டும், தேசிய மீன்வளக் கொள்கை மற்றும் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும், புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது, இடஒதுக்கீடு கொள்கையில் மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சிறப்பு அழைப்பாளா்களாக, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் சாகுல் அமீது, மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் பி. காளியம்மாள் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினா். இதில், வடக்கு மாவட்டச் செயலா் இக்பால், தொகுதி செயலா் வேதா பாலா, தொகுதி தலைவா் தி.ப. சரவணன், பொருளாளா் ஜோசப் தினேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றியச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்ட நிறைவில், கட்சி சாா்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளா்க்கும் ஆா்வத்தை தூண்டும் வகையில், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com