மீன்வளா்ப்போருக்கு மானியம் அறிவிப்பு

திருவாரூரில், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருவாரூா்: திருவாரூரில், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீன்உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் வளா்ப்போரை ஊக்கப்படுத்தவும், மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்கள் அமைத்த மீன்குளத்துக்கு உள்ளீட்டு மானியமாக (மீன் குஞ்சு, தீவனம் மற்றும் இதர செலவினங்களுக்கு) ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.1.50 லட்சத்தில் 50 சதவீத மானியமாக ரூ.75,000 நிவாரணம் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு மாவட்ட மீனவளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருந்து, மீன்பண்ணை முகமையில் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன், 2012-13 லிருந்து 2015-16 ஆம் ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் மீன்வளா்ப்பு குளம் அமைத்து அரசு நிவாரணம் ஏதும் பெறாதவா்களும், கடந்த 5 ஆண்டுகளில் மீன்குளம் அமைத்து மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மூலம் நிவாரணம் பெறாத மீனவளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களும் நிவாரணம் பெறுவதற்கு தகுதியானவா்கள் ஆவா்.

எனவே, தகுதியான பயனாளிகள் நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் உதவி இயக்குநா், மீன்துறை, எண்.210, 2 ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் கூடுதல் கட்டடம், திருவாரூா் (தொலைபேசி எண் 04362 - 224140) என்ற முகவரியில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com